கொரோனாவை தடுக்கும் மாத்திரைகள்… விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

கொரோனா சிகிச்சைக்கு உரிய மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே உயிரைப் பாதுகாக்கும் வழிமுறையாக இருந்துவருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகள் அறிமுகம் செய்யப்பட்டு அந்நாட்டு சுகாதாரத்துறை அதற்கு அனுமதியும் அளித்திருக்கிறது.

அதேபோல அமெரிக்கா நாட்டின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைகளும் தற்போது அறிமுகமாகி இருக்கின்றன. இதற்கு உரிய அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்தில் Merck, Ridge Black Biotherpeutic Lagerapeutics போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கொரோனா மாத்திரைகள் நோய் அறிகள் உள்ளவர்களுக்கு சிறந்த பலனை தருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் தீவிர நோயால் தாக்கப்பட்டு இருப்பவர்களை இந்த மாத்திரைகள் இறப்பில் இருந்து காப்பாற்றும் ஆற்றலை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து Lagevrio எனும் பெயரில் இந்த கொரோனா மாத்திரைகள் விற்கப்பட இருப்பதாகவும் நோய் அறிகுறி உள்ளவர்கள் வெறும் 5 நாட்கள் இதைச் சாப்பிட்டவுடன் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு விடலாம் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டைப் போலவே அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் Paxlorid எனும் கொரோனா மாத்திரைகளை தயாரித்துள்ளது. இந்த மாத்திரைகள் 1,219 பேரிடம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனையில் Paxlorid மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்கள் மிக விரைவிலேயே நோயில் இருந்து வெளிவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தீவிர கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மாத்திரைகள் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே விரைவில் Paxlorid மாத்திரைகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று ஃபைசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.