மரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம்!!! மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்!!!
- IndiaGlitz, [Saturday,October 24 2020]
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் விவசாய நிலத்தில் குழித் தோண்டும் போது பழங்காலத்து பொருட்கள் கைப்பற்றபட்டு இருக்கிறது. இந்தப் பொருட்களை அம்மாவட்ட வருவாய்த் துறையினர் கைப்பற்றி பத்திரப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மதுக்கூர் அடுத்த அத்திவெட்டி கிராமத்தில் விவசாயப் பண்ணை வைத்திருப்பவர் லெனின். நேற்று தனது பண்ணையில் கொய்யா மரக்கன்றுகளை நடுவதற்காக தொழிலாளர்களை அமர்த்தினார். அதற்காக தொழிலாளர்கள் நிலத்தில் குழிகளைத் தோண்டி இருக்கின்றனர். அப்படி தோண்டும் போது வித்தியாசமான ஓசை கேட்டு இருக்கிறது. அதனால் மிக விரைவாகக் குழித் தோண்டி பார்த்த தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
காரணம் அந்தக் குழியில் 3 பழங்கால சாமி சிலைகள் மற்றும் பூஜை செய்வதற்கான பொருட்கள் மற்றும் உலோகத்தாலான பானைகள் உட்பட மொத்தம் 27 பொருட்கள் கைப்பற்றப் பட்டு இருக்கிறது. இதையடுத்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து அந்தப் பொருட்களை கைப்பற்றி பத்திரப் படுத்தினர். மேலும் இதுபோன்ற பழங்காலத்து பொருட்கள் அப்பகுதியில் கிடைக்குமா என்ற ஆர்வமும் ஏற்பட்டு இருக்கிறது.