அதிர்ஷ்டக்காத்து என்றால் இதுதானா? கொடுத்தது 7 லட்சம் ஆனால் கிடைச்சது 2 கோடி?

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

பழங்கால நாணயத்தின் மீது ஆர்வம் உள்ள ஒரு நபர் கனடாவில் ஒரு பழைய பண்ணை வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். காரணம் இவரைப்போல நாணயச் சேகரிப்பில் ஈடுபாடு கொண்ட ஒரு ஆசிரியரின் வீடு என்பதால் அங்கு பழைய நாணயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு என்று நம்பினார். உண்மையில் அவரது நம்பிக்கை வீண்போகவே இல்லை. ஆனால் எதிர்ப்பார்த்தற்கு மேல் அங்கு பழைய நாணயங்கள் மட்டுமல்லாது, தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களும் இருந்து இருக்கின்றன. இதனால் ஒரேநாளில் ரூ.2 கோடிக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.

அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் கனடாவில் உள்ள ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் பழைய வீட்டை ரூ.7 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் பழைய நாணயங்களை தேடிக் கொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக தங்கம், வைரம் பதித்த மோதிரம் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளும் கிடைத்து உள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இத்தகவலைப் பார்த்த பலரும் அதிர்ஷ்டம் என்பது இதுதானா? என வியப்புற்று வருகின்றனர். காரணம் ஒரே நாளில் 7 லட்சத்தைக் கொடுத்து 2 கோடிக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். மேலும் பழைய பொருட்களின் மீது ஆர்வம் கொண்ட அலெக்ஸ்ஸுக்கு பழைய பொருட்களும் கிடைத்து இருக்கின்றன.