விஜய் தந்தை எஸ்.ஏ.சி மீதான வழக்கு: சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

சமீபத்தில் விருகம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், 'திருப்பதி கோவிலுக்கு அளிக்கும் காணிக்கை கடவுளுக்கு லஞ்சம் என கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என எஸ்.ஏ.சி மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடந்த நிலையில் எஸ்.ஏ.சி-க்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.