தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் டிடி: மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை
- IndiaGlitz, [Thursday,April 29 2021]
தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி வாங்குவதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூபாய் இரண்டு லட்சம் டிடி செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமான அன்று பேட்டியளித்த நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசியால் தான் விவேக் இறந்தார் என்றும் தடுப்பூசி தேவையில்லை என்றும் தடுப்பூசியை மக்கள் யார் கேட்டார்கள் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்
இதனை அடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தனக்கு முன்ஜாமீன் வேண்டுமென்று மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ’தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசக்கூடாது என்றும் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்ப கூடாது என்றும், பதற்றமான சூழ்நிலையை உருவாக்க கூடாது என்றும், அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்
மேலும் தடுப்பூசி வாங்குவதற்காக ரூபாய் இரண்டு லட்சம் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் டிடி செலுத்த வேண்டுமென்று கூறி மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதித்து முன்ஜாமீனை நீதிபதி வழங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி குறித்த அவதூறு வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமின்#MansoorAliKhan | #CoronaVaccine | #WearAMask | #Covid19 | https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/TeYqFQl9fL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 29, 2021