கப்பலையே தாக்கி அழிக்கும் ஏவுகணை… இந்தியக் கடற்படையின் புது அசத்தல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கக் கடல் பகுதியில் கப்பலைத் தாக்கி அழிக்கும் புது ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. இந்தச் சோதனை இந்தியப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்லாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தி தொடர்பாளர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கிச் செல்லும் ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து எதிர்ப்பு ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. வங்கக் கடலில் நீண்ட தூரத்தில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்த ஏவுகணை கடலில் செல்லும் கப்பல் போன்ற பெரிய பொருட்களைத் துல்லியமாகத் தாக்குவதற்கு இந்திய பாதுகாப்பு துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இது துல்லியமாக நீண்டத் தொலைவில் உள்ள பொருளையும் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்திய பாதுகாப்பு படைக்கு ரபேல் ரக விமானங்கள் வாங்கப்பட்டன. தற்போது புதிய ஏவுகணை சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியப் பாதுகாப்புத் துறையை வலிமை வாய்ந்ததாக உருவாகி வருவதாகவும் மத்திய அரசு கருத்துத் தெரிவித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments