முகக்கவசம் அணியாதவர்களுக்கு கல்லறைத் தோட்டத்தில் நூதன தண்டனை… வைரல் தகவல்???

 

கொரேனா பரவலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த இறுதியான முடிவு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே தனிநபர் பாதுகாப்பு, சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை குறித்து மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு நூதனத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடி போலீஸாரிடம் மாட்டிக்கொண்டால் கல்லறைத் தோட்டத்தில் பிணக்குழியை வெட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த விழிப்புணர்வை வரவழைக்க முடியும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இத்தண்டனை குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டு அதிகாரி ஒருவர், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் “கொரோனா காலத்தில் முகக்கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More News

பிக்பாஸில் நான் இல்லை, அதைவிட எனக்கு சூப்பர் வேலை இருக்குது: மறுப்பு தெரிவித்த பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பல பிரபலங்களின் பெயர்கள் செய்திகளில் அடிபட்டு வருவது தெரிந்ததே.

சூர்யாவின் நீட் குறித்த பார்வை அடுத்த ஆண்டு மாறும்: பாஜக பிரபலம் நம்பிக்கை 

சமீபத்தில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதும் இந்த அறிக்கை

போதை மருந்து தயாரிக்கிறதே உங்க ஊர்ல தான்: கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி!

போதைப்பொருள் தயாரிப்பதே உங்க ஊரில் தான் என்றும் அதை முதலில் சுத்தப்படுத்திவிட்டு அதன் பிறகு மும்பைக்கு வாருங்கள் என்றும் கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி கொடுத்து இருப்பது

100 நாள் வீடு, 100 நாள் பிக்பாஸ் வீடு, இதுதான் கமல் அரசியல்: அமைச்சர் ஜெயகுமார்

கொரோனா வைரஸ் பயம் காரணமாக 100 நாட்கள் வீட்டுக்குள் இருந்த கமல்ஹாசன், அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கவுள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்துள்ளது

எந்த சாமியும் செய்யாததை எடப்பாடி பழனிசாமி செய்தார்: காமெடி நடிகர்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே.