கனடா பிரதமரையும் விட்டுவைக்காத 'இந்தி தெரியாது போடா': நெட்டிசன்களின் கைவரிசை!
- IndiaGlitz, [Tuesday,September 15 2020]
‘இந்தி தெரியாது போடா’ மற்றும் ’I am a தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகளை கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்கள் அணிந்து வைரலாகி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
மேலும் இந்தி மொழிக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரையுலக பிரபலங்கள் அணிந்த இந்த டீசர்ட் குறித்த ஹேஷ்டேக்குகள் உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டை தனது கையில் வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் அவரது கையில் இருந்த டீ சர்ட்டில் ’கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த விழிப்புணர்வு வாசகம் தான் இருந்தது என்பதும், நெட்டிசன்கள் போட்டோஷாப் மூலம் அதனை ’ஹிந்தி தெரியாது போடா’ என மாற்றி வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட்டுகளை ஒருசில திரையுலகினர் அணிந்ததாக போட்டோஷாப் மூலம் பதிவு செய்த நெட்டிசன்கள் தற்போது கனடா பிரதமரையும் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.