கொரோனாவுக்கு பழந்தமிழ் வைத்தியம்!!! வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா???

  • IndiaGlitz, [Friday,April 03 2020]

 

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் முதற்கொண்டு அனைத்து சமூக வலைத் தளங்களிலும் கொரோனாவுக்கு மருந்து என்ற பெயரில், சில புத்தகத் தாள்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த நம் மக்கள் பழங்காலத்திலேயே கொரோனா நோய்த்தொற்று இருந்திருக்கும்போல, அப்பவே மருந்தும் இருந்திருக்கிறது எனப் பெருமையுடன் அதை அதிகளவில் பிகிர்ந்து கொண்டும் வந்தனர் .

எந்த ஒரு நோய் பரவும்போதும் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் என்ற பெயரில் சில போலிகளும் உலவிவருவதால் நமது முன்னோர்களின் மருத்துவ முறைக்கு இருந்து வந்த நல்ல பெயர் கொஞ்சம் கொஞ்சமாக காணாமலே போய்விட்டது. இந்நிலையில் தான் தற்போது பாக்கெட் வைத்தியம் என்ற புத்தகத்தில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது எனத் தவறான தகவல்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்தப் பாக்கெட் வைத்தியத்தில் சொல்லப்பட்டு இருப்பது கொரோனாவுக்கான மருந்து இல்லை என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. பூ.சு. துளசிங்க முதலியாரால் ஏட்டுப்பிரதியும் கைமுறையும் அச்சுப்பிரதியுங்கொண்டு ஆய்ந்துயெழுதி முடிவுபெற்று, என்ற விளக்கத்துடன் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் 61 ஆவது பக்கத்தில் கொரோசன நோய்க்கான மருந்து சொல்லப்பட்டு இருக்கிறது.

கொரோசன என்பது உண்மையில் தற்போது நாட்டு மருந்தில் குறிப்பிடப்படும் கோரோசனை என்பது ஆகும். இந்த மருந்துப்பொருள் மாடு, மான் போன்ற விலங்கினங்களின் உணவு மண்டலங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. உணவு மண்டலங்களில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தப் பொருளை மிளகு, லவங்கம், திப்பிலி போன்ற பொருட்களுடன் கலந்து உலரவைத்து மருந்துபொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சித்தர்களின் மருந்துப்பொருட்களிலும் இந்த கோரோசனை பயன்டுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கோரோசனை என்பதுதான் 1914 இல் வெளியிடப்பட்ட பாக்கெட் வைத்தியம் புத்தகத்தில் கொரோசன என அச்சிடப்பட்டு இருக்கிறது. பாக்கெட் வைத்தியம் புத்தகத்தின் 61 ஆவது பக்கத்தில் இருக்கும் “கொரோசன” என்பதில் இருந்த “ச” வை மறைத்து தற்போது நம்மவர்கள் கொரோனாவுக்கு மருந்து என்று வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருவதால் பழங்கால மருத்துவ முறைக்கு இருக்கும் மதிப்பும் நம்பிக்கையும் காணாமல் போய்விடும் என்ற தெளிவில்லாமல் சிலர் செய்யும் காரியம் வரவேற்கத்தக்கதல்ல.

More News

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி விட்டது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இருந்தாலும்

உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா இருக்கிறதா??? தெரிந்துகொள்ள  இந்த செயலியை பயன்படுத்துங்கள்!!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

வீடு தேடி வரும் காய்கறிகள்: திருப்பூர், நெல்லை போல் சென்னையில் கிடைக்குமா?

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மளிகை மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் மருத்துவ சேவை செய்த நடிகரின் மனைவி!

எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போதும் பொதுமக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வந்த பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவியை சமூகவலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர் 

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெளியூர்களில் சிக்கியிருக்கும் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர்