நீலகிரியில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு? யானை உயிரிழப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்றுமுன்தினம் 4 வயதுள்ள ஆண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது. இதையடுத்து இந்நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.
ஆந்த்ராக்ஸ் தொற்றுநோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயத் தன்மை கொண்டது. அதோடு ஒரு விலங்கிடம் இந்த நோய்த்தாக்கம் காணப்பட்டால் தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய மசினகுடி, சிங்காரா, சீகூர் போன்ற பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுயானை, புலிகள், கரடிகள், சிறுத்தைப்புலி, செந்நாய்கள், கழுதைப்புலி போன்றவை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 4 வயதான குட்டி யானை துதிக்கை மற்றும் வாய் பகுதியில் ரத்தம் வெளியேறி ஆந்த்ராக்ஸ் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளது. இதையடுத்து நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments