ஆந்தாலஜி திரைப்படத்திற்காக இணையும் ரஜினி, விஜய், அஜித் இயக்குனர்கள்!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்கள் தற்போது ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ’விக்டிம்’ என்ற புதிய ஆந்தாலஜி திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நால்வர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’விக்டிம்’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா ரஞ்சித், அஜீத் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, விஜய் நடித்த ’புலி’ என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன் என ரஜினி, அஜித், விஜய் இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இவர்களுடன் எம்.ராஜேஷ் அவர்களும் இந்த ஆந்தாலஜி படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திலும் மற்ற ஆந்தாலஜி திரைப்படங்கள் போலவே முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வழுக்கை தலையை மறைத்து திருமணம்: போலீஸில் புகார் அளித்த மணமகள்!

வழுக்கைத் தலையை மறைத்து விக் வைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கணவர் மீது புதுமணப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆபாச வீடியோக்களை லட்சக்கணக்கில் விற்ற பஸ் கண்டக்டர்: ஏமாந்த பட்டதாரி பெண்கள்!

பட்டதாரி பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை

தரமான வார்த்தைகள்: தோனி குறித்து பிரபல நடிகர்!

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியின் 53வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தல தோனி பந்துவீச்சை

எல்லாத்துக்கும் ஸ்டாப்: வந்தவுடனே அர்ச்சனாவை அப்செட் ஆக்கிய சுசித்ரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பாடகி சுசித்ரா வந்திருக்கும் நிலையில் இதுவரை நடந்த நாட்களில் போட்டியாளர்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கின்றார்கள்

நாசர் மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்!

அட்டகத்தி, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உள்பட பல திரைப்படங்களை சிவி குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார் என்பது தெரிந்ததே