பெரிய இவன்னு நினைப்பு.. பேசாத போடா.. அன்ஷிதா ஆத்திரம் யார் மீது?
Send us your feedback to audioarticles@vaarta.com
உன்னிடம் எனக்கு பேச விருப்பமில்லை, பெரிய இவன்னு நினைப்பு என அன்ஷிதா ஆத்திரத்துடன் கூறுகிறார். அவர் முத்துக்குமரனை பார்த்து இவ்வாறு பேசினார் என்பது இன்றைய அடுத்த புரோமோவில் இருந்து தெரிகிறது.
பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன், பல இடங்களில் சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் வெறுப்பேற்றி வருகிறார். அவருக்கு எதிரான விமர்சனங்கள் பல பதிவாகி வருவதோடு, அவரை பலரும் குறை சொல்லி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு விஷயத்தை கூறும் போது, சுருக்கமாக அழகாக சொல்லாமல், நீளமாகவும் வெறுப்பேற்றும் வகையில் முத்துகுமரன் பேசியதை, நேற்று விஜய் சேதுபதியே மென்மையாக கண்டித்தார் என்பது, நேற்றைய எபிசோடை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இவ்வாறு இருக்கும் நிலையில், இன்றைய இரண்டாவது புரோமோ வீடியோவில், முத்துக்குமரனிடம் அன்ஷிதா ஆத்திரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. "நான் விளையாட வந்திருக்கிறேன், நீ என்ன விளையாடும்போது மோசமாக ஏன் தோன்றுகிறது?" என்று அன்ஷிதா கேட்க, "நான் உங்களை எதிர்த்து விளையாடுகிறேன், அதனால் உங்களுக்கு மோசமாக தான் தோன்றும் என்று முத்துகுமரன் பதிலளிக்கிறார்.
அதற்கு அன்ஷிதா "எனக்கு வாழ்க்கையில் நடிக்க தெரியாது, ஆனால் நீ வாழ்க்கையில் நடிக்கிறாய்" என்று கூற, "நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொன்னால், நான் எப்படி ஒப்புக் கொள்வது?" என்று பதிலளிக்கிறார். உடனே அன்ஷிதா "எனக்கு உன்கிட்ட பேச விருப்பமில்லை, உன்னிடம் பேச விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இவன்னு நினைப்பு" என்று கூறி, அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.
இந்த புரோமோவில் இருந்து, இன்றைய எபிசோடில் முத்துக்குமரன் மற்றும் அன்ஷிதா இடையிலான சண்டை தான் கண்டெண்ட் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happada …. Innaiku content iruku#biggbosstamil #biggbosstamil8
— Imadh (@MSimath) October 14, 2024
pic.twitter.com/m0N5CbAn7O
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments