மற்றொரு விபரீதம்… போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து 3 பேர் உயிரிழப்பு…
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்தால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆந்திராவில் அதைப்போலவே பல சம்பவங்கள் அரங்கேறி வருவதாகச் செய்திகள் அதிர்ச்சை ஏற்படுத்து கின்றன. ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் போலி மதுபானங்கள், சாராயம் போன்றவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அம்மாநில செய்திகள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்பு சாராயத்தில் சானிடைசரைக் கலந்து குடித்து 19 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்தால் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நடந்ததாகவும் இதனால் பல பேர் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துமனைகளில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சானிடைசரில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு 60 விழுக்காடாக இருப்பதால் அதில் தண்ணீர் கலந்து குடித்தால் போதை வரும் எனறு சிலர் இப்படியான விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்படும், உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் தொடர்ந்து முட்டாள் தனமான முடிவுகளை எடுப்பது குறித்து தற்போது அம்மாநில அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com