ரஜினியின் 'கபாலி'யில் இணைந்த 'மெட்ராஸ்' நடிகை

  • IndiaGlitz, [Monday,September 21 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த விநாயகர் சதூர்த்தி தினத்தன்று பூஜையுடன் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. பா,ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு நடிகையும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'மெட்ராஸ்' படத்தில் மேரி என்ற கேரக்டரில் நடித்த நடிகை ரித்விகா இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவரது நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. ரித்விகா ஏற்கனவே இயக்குனர் பாலாவின் 'பரதேசி' படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், கலையரசன், தினேஷ், ரித்விகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு முரளி ஒளிப்பதிவும், பிரவீண் படத்தொகுப்பும் செய்கின்றனர். சந்தோஷ் நாராயண் இசையமைக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் கலைப்ப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

More News

வெற்றிமாறனின் 'விசாரணை'க்கு இயக்குனர் விஜய் பாராட்டு

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் குறித்து பத்திரிகையாளர்களுக்கான அறிக்கை ஒன்றை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:....

சிரஞ்சீவி-ராம்சரண் தேஜா படத்தில் தமன்னா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம்சரண்தேஜாவின் அடுத்த படம் 'புரூஸ்லீ'. இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

ஷாருக்கான் படத்தில் 'பாகுபலி' ஒளிப்பதிவாளர்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்து வரும் 'தில்வாலே (Dilwale) திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது...

சிவகாமி ரம்யாகிருஷ்ணனின் கிரிக்கெட் அவதாரம்?

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படத்தின் கம்பீரமான ராஜாமாதா சிவகாமி கேரக்டரில் அற்புதமாக நடித்து பெயர் வாங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்....

3D-யில் விஜய்யின் 'புலி'?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சென்சாரும் செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....