த்ரிஷாவுக்கு இன்னொரு சூப்பர்ஹிட் படம்.. 2ஆம் பாகமாகும் காவிய திரைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,November 28 2024]

ஏற்கனவே நடிகை த்ரிஷா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வரும் நிலையில், அவரது சூப்பர்ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை திரிஷா தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி' மற்றும் ‘குட் பேட் அக்லி’, மோகன்லாலுடன் ’ராம்’, டொவினோ தாமஸ் உடன் ‘ஐடெண்டிட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், நேற்று பூஜையுடன் தொடங்கிய சூர்யாவின் 45வது படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

த்ரிஷாவின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய காவியமான '96' திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனை அடுத்து, த்ரிஷாவுக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படம் தயாராகி வருவதாகவும், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

மருதமலை முருகன் கோவில்: பாம்பாட்டி சித்தரின் ரகசியங்கள்

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் P.N. பரசுராமன் அவர்கள் மருதமலை முருகன் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

சபரிமலை யாத்திரை பெண்கள் செய்யவேண்டியது என்ன?

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் ஐயப்பன் வழிபாடு குறித்து ஆழமாகப் பேசியுள்ளார். குறிப்பாக, பெண்கள் ஐயப்பனை வழிபடுவது பற்றிய கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.

சித்தார்த் - அதிதிராவ் 2வது முறையாக திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் இன்று மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் லோகோ.. ரேஸ்க்கு தயாராகும் அஜித்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ உடன் நடிகர் அஜித் கார் ரேஸுக்கு தயாராகும் கார் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.