தனுஷின் அடுத்த படத்தில் சூப்பர் கிரேஸி பாடல்: டான்ஸ் மாஸ்டர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு சூப்பர் கிரேஸி பாடல் ஒன்று இடம் பெறவுள்ளதாக டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

தனுஷின் 43வது படமாக உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்காக டான்ஸ் ரிகர்சல் நடைபெற்றதாகவும் இதன் தனுஷ் கலந்து கொண்டதாகவும் புகைப்படங்களுடன் கூடிய செய்தி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஜான்சி தெரிவித்துள்ளார்

ஜீவி பிரகாஷ் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவாகும் இந்த பாடல் தனுஷ் அவர்களின் மற்றொரு சூப்பர் கிரேஸி பாடலாக இருக்கும் என்றும் அவருடைய மற்றொரு டிரெண்டிங் பாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனுஷூக்கு இன்னொரு ரவுடி பேபி பாடல் உருவாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது