மம்முட்டி - கெளதம் மேனன் படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டாரா? 20 வருடங்களுக்கு பின் கூட்டணி..!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2024]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மம்முட்டி நடிக்க இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டார் இணைய இருப்பதாகவும் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த கூட்டணி உருவாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் மணிரத்னம் உள்பட பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் அவர் பிஸியாக இருக்கும் நிலையில் அவ்வப்போது மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தான் கௌதம் மேனன் கூறிய கதை பிடித்து விட்டதை அடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க மம்முட்டி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டார் இணைய இருப்பதாகவும் அதாவது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ’ராப்பக்கல்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மம்முட்டி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.