விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் போனஸ்

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அனைத்து எப்.எம்களிலும் 'பைரவா' பாடல் தொடர்ந்து ஒலித்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் போனஸாக இந்த படத்தில் கூடுதலாக ஒரு பாடல் இணைக்கப்பட்டுள்ளது. பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடல் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதை பாடலாசிரியரும், எடிட்டரும் தங்கள் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர். இந்த பாடலின் டைட்டில் குறித்த விபரங்களை படக்குழுவினர் விரைவில் முறைப்படி அறிவிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 'பைரவா' படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல்கள் அனைத்தையும் கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

More News

பாலிவுட் நடிகர் ஓம்புரி மறைவிற்கு பிரதமர், கமல்ஹாசன் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிறந்த நாள் சிறப்பு பதிவு

ஆஸ்கார் பரிசு என்பது இந்திய திரையுலகினர்களுக்கு எட்டாக்கனியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் ஒரே ஆண்டில் ஒன்றில்லை இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று 100 கோடி இந்தியர்கள் மனதிலும் ஒரே நிமிடத்தில் இடம் பெற்றவர் நமது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் மயங்காத இந்திய இளைஞர்கள் இருக்க முடியாது.

ஃபர்ஸ்ட்லுக் வரும் முன்னே வியாபாரத்தை தொடங்கிய சூர்யா படம்

பிரபல நிறுவனம் ஒன்று 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தமிழக உரிமையை பெற மிகப்பெரிய தொகை தர முன்வந்துள்ளதாகவும் இதுகுறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...

உதயநிதிக்காக தரலோக்கல் பாடல் கம்போஸ் செய்த இசையமைப்பாளர்

கடந்த சில வருடங்களாக மாஸ் நடிகர்களின் படங்களில் தரலோக்கல் பாடல் இடம்பெறுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள ஒரு படத்திலும் தரலோக்கல் பாடல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது...