விஜய் குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

  • IndiaGlitz, [Thursday,January 21 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தில் விஜய்யின் மகள் கேரக்டரில் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் மகள் திவ்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும், சமீபத்தில் லடாக் பகுதியில் நடைபெற்ற 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய்யின் மகள் திவ்யா கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.


விஜய்யின் மகளாகவே திவ்யா 'தெறி' படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடித்திருந்த நிலையில் தற்போது விஜய்யின் மகளும் திரையில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், மொட்டை ராஜேந்திரன், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் 'தெறி' படத்தை அட்லி இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டைட்டில் ஆனது 'பாட்ஷா' படத்தின் அனல் பறக்கும் வசனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இன்று மாலை...

சமந்தா, நயன்தாரா பாணியை பின்பற்றும் தமன்னா

நடிகை தமன்னா இதுவரை தான் நடித்த படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ் மூலம் டப்பிங் பேசப்பட்டு ...

மீண்டும் இணையும் மணிரத்னம்-கமல்ஹாசன்

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து தற்போது பெங்களூர்...

நடிகர் சங்க கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. முன்னாள் பொருளாளர் சந்திரசேகர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றபோது...

இன்று மாலை ஜி.வி.பிரகாஷின் சூப்பர் ஸ்டார் டைட்டில்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்...