மற்றொரு மாஸ் நடிகர் படத்தின் உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மாஸ் நடிகர்களின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’, விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ சிவகார்த்திகேயனின் ‘டான்’ மற்றும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்தது என்பது தெரிந்ததே.
மேலும் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ கார்த்தியின்’சர்தார்’ மாதவனின் ‘ராக்கெட்டரி’ ஆகிய படங்களையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சியான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’கோப்ரா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Cobra gets bigger !
— Seven Screen Studio (@7screenstudio) June 27, 2022
It's '#Lalitkumar & #UdhayanidhiStalin' presents #ChiyaanVikram's #Cobra ! #CobraFromAugust11
Excited to associate with @Udhaystalin Sir & @RedGiantMovies_#CobraWithRedGiantMovies
An @AjayGnanamuthu Film ??
An @arrahman Musical ??@SonyMusicSouth pic.twitter.com/otUZWg9bw9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments