தமிழகத்தை நோக்கி இன்னொரு புயல்: எங்கே? எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்க கடலில் உருவான நிவர் புயல் சமீபத்தில் தமிழகத்தை கரை கடந்து பெரும் சேதத்தை உருவாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சேதத்தின் மதிப்பே இன்னும் கணக்கிடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் உருவாகி தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு ஒன்று உருவாகி இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி தமிழகத்தின் தென் பகுதியை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நவம்பர் 29ஆம் தேதி அதாவது நாளை தோன்றும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு, அதன் பின்னர் தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தென் தமிழகத்தை நோக்கி செல்லும் என்றும் இதனால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வட மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
மேலும் டிசம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நிவர் புயலால் தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் கன மழை பெய்தால் அனைத்து நீர் நிலைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படும் வாய்ப்புகள் இருப்பதால் வெள்ள அபாயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments