'தளபதி 69' படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்.. குவியும் அப்டேட்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தின் அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து, ரசிகர்களை திகைக்க வைக்கின்றன. அப்டேட் மேல் அப்டேட் வெளியாகி கொண்டிருப்பதால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, கௌதம் மேனன், பிரியாமணி ஆகியோர் இணைந்துள்ளதாக கடந்த இரண்டு நாட்களில் அப்டேட்டுகள் வந்துள்ளன. இப்போது, புதிதாக நடிகர் நரேன் ‘தளபதி 69’ பட்த்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நரேன், ஜெயம் ரவியின் ’இறைவன்’, ஜூனியர் என்டிஆரின் ’தேவாரா’ போன்ற படங்களில் நடித்ததையடுத்து, தற்போது ’தளபதி 69’ படத்தில் இணைந்துள்ளார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Welcome to #Thalapathy69 family @itsNarain ♥️#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @menongautham #Priyamani @hegdepooja #MamithaBaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/eGLY7iyvBR
— KVN Productions (@KvnProductions) October 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com