கோமதியை அடுத்து சித்ரா பெற்றுத்தந்த தங்கம்: பிரபல நடிகர் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்து நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த சித்ரா, இன்னொரு தங்கம் நாட்டிற்கு பெற்றுத்தந்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்றுடன் முடிந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடைபெற்ற 1500 மீட்ட ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 14.46 வினாடிகளில் கடந்தார். தங்க மங்கை சித்ரா ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தங்கம் வென்ற சித்ராவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கலையரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'இந்தியாவுக்கு இன்னொரு தங்கம். 1500 மீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்ற சகோதரி சித்ராவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 4 நாள் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
An another gold for india... Valthukkal sister #PUChitra for the gold medal ??in women's 1500m clocking 4:14.56 at #AsianAthleticsChampionship2019 #Congratulations #ProudMoment wishing to win gold in world championships pic.twitter.com/uOpMpXDqNq
— Kalaiyarasan (@KalaiActor) April 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments