மாதவன் - நயன்தாரா படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

மாதவன் மற்றும் சித்தார்த் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் ’தி டெஸ்ட்’ என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். டெஸ்ட் கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட இந்த படம் வித்தியாசமான திரைக்கதை கொண்டது என்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் முதல் முறையாக மாதவன் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகையான ராஷி கண்ணா இணைந்து உள்ளதாகவும், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா ஏற்கனவே ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதேபோல் மாதவன் மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆயுத எழுத்து’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது 75 வது படத்தை நீல் கிருஷ்ணா இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜெய், சத்யராஜ் உள்பட பலர் நடிக்க இருப்பது குறித்து அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.