சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் ‘விருமன்’ பட நாயகியுமான அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா மற்றும் பிரபல இயக்குனர் மிஷ்கின் ஆகியோரும் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் காமெடி உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ ’வேலைக்காரன்’ ’நம்ம வீட்டு பிள்ளை’ ’டாக்டர்’ உள்பட பல படங்களில் யோகிபாபு நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We are delighted to welcome @iYogiBabu onboard for #Maaveeran / #Mahaveerudu ??@Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @Kumar_gangappan @DoneChannel1 pic.twitter.com/Rja8XDJquq
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com