கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்துன் மோதும் பிரபலத்தின் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் சோலோவாக வெளியாகும் என்றும் அதனால் ஓப்பனிங் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அதே நாளில் தான் பிரபலத்தின் படம் ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கடந்த சில மாதங்களாக ’டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தது என்பதும், முற்றிலும் புதுமுகங்கள் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படம் ஜூலையில் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்து ’இந்தியன் 2’ படத்துடன் ’டீன்ஸ்’ படம் மோதுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மற்ற படங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது கோலிவுட் திரையுலகில் வழக்கமாக இருந்து வரும் நிலையில் ’இந்தியன் 2’ படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் தைரியமாக தனது ’டீன்ஸ்’ படத்தை ரிலீஸ் செய்யும் பார்த்திபனின் செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Yes, #TEENZ are arriving on July 12th '24 in Theatres! #TeenzFromJuly12th @rparthiepan @dopgavemic @k33rthana @immancomposer @GenauRanjith @lramachandran @AdithyarkM @Iam_Nithyashree @shreyaghoshal @Arivubeing @iYogiBabu @j_prabaahar @shrutihaasan @CVelnambi @teenzmovieoffl… pic.twitter.com/RQ8CbfkO72
— Nikil Murukan (@onlynikil) July 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com