இன்னொரு பேரழிவு!!! அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வட இந்தியாவில் ஏற்பட்ட ஆம்பன் புயலின் தாக்கமே இன்னும் சரி செய்யப்படாத நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பலருக்குப் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அசாம், பூனே போன்ற மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கடும் மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த மழைப்பொழிவினால் அசாம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கின்றன.
நேற்று தெற்கு அசாம் பகுதியில் உள்ள பராக் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கச்சார் பகுதியில் 7 பேரும் ஹைலகண்டி பகுதியில் 7 பேரும் மற்றும் சரிம்கஞ்ச் பகுதியில் 6 பேரும் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர பலருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப் பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கோல்போரா பகுதி முழுவதும் கடும் நிலச்சரிவினால் பாதிக்கப் பட்டு இருக்கிறது. மேலும், நாகான், ஹோரஜாய் பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் பாதிப்புகள் அதிகம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நிலச் சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். தற்போது மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அப்பகுதியில் ஏற்பட்ட சரிவுகளை சரிசெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு அளித்த தகவலின் படி இதுவரை 6 பேர் இறந்து விட்டதாகவும் 348 மாவட்டங்கள் தண்ணீர் சூழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவினால் 27 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout