ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த இன்னொரு படம்!

  • IndiaGlitz, [Monday,April 08 2019]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் இரண்டு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். ஜெயலலிதா கேரக்டரில் நித்யாமேனன் நடிக்கும் 'தி அயர்ன் லேடி' என்ற படத்தை இயக்குனர் பிரியதர்ஷனும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடிக்கும் 'தலைவி' என்ற படத்தை இயக்குனர் விஜய்யும் இயக்கி வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக இயக்கும் முயற்சியில் இயக்குநர் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வெப்சீரீஸில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இயக்குனர் கே.ஜகதீஸ்வர ரெட்டி என்பவரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 'சசிலலிதா' என்ற தலைப்பில் ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே சசிகலா வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் எத்தனை பேர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்குவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சூர்யாவின் 'என்.ஜி.கே குறித்த முக்கிய தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் பகுத்தறிவா? கீ.வீரமணிக்கு நடிகர் ராஜ்கிரண் கடும் கண்டனம்

நாத்திகர் வேஷம் போடும் பெரும்பாலானோர் இந்து மத கடவுள்களை மட்டுமே குறி வைத்து விமர்சனம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி,

19வது ஓவரின்போது தல அப்படி என்ன தான் சொன்னார்?  சஹாரின் சகோதரி பதில்!

கடந்த சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுகு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 2 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது

திரும்ப திரும்ப ஆதரவு கேட்க முடியாது: ரஜினி ஆதரவு குறித்து கமல்

தனது கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பார் என நம்புவதாக கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ரஜினி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா? அதிகாரபூர்வ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தலைவர் 167' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது