கொரோனா பாதித்த குழந்தைகளைத் தாக்கும் இன்னொரு மர்மநோய்!!! அதிர்ச்சித் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நியூயார்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகளுக்கு மேலும் ஒரு மர்மநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படாத இந்த நோயின் அறிகுறிகள் முன்னமே பல ஐரோப்பிய நாடுகளிடம் காணப்படுவதாகக் கடந்த திங்கள் கிழமை அன்று அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த மர்ம நோய் குறித்து நியூயார்க் சுகாதாரத் துறை அதிகாரிகள், “கொரோனா பாதிப்பினால் இரத்த நாளங்களில் ஏற்பட்ட வீக்கம்” என்று விளக்கம் அளித்துள்ளனர். மேலும், இந்த அறிகுறியால் நியூயார்க்கில் யாரும் இறக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
தற்போது நியூயார்க்கில் புதிதாக பரவிவரும் மர்மநோய் பற்றி நகர சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இந்த மர்மநோய் பற்றி மருந்துவர்களுக்கு இன்னும் முழுமையான புரிதல் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2 முதல் 15 வயதிற்குட்பட்ட இந்த குழந்தைகளிடம் நச்சு தன்மை அல்லது Kawasaki நோயுடன் தொடர்புடைய நோய் அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Kawasaki என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் மிக அரிதான நோயாகும்.
நியூயார்க் மாகாணத்தின் சுகாதார ஆணையர் டாக்டர் ஹேபவர்ட் ஏ. ஜுக்கர் புரிந்து கொள்ளப்படாத அறிகுறிகளுடன் பரவியிருக்கும் இந்த நோய்ப் பற்றி ஆய்வு செய்துவருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது “கொரோனா பாதிப்பினால் ஏற்படும் பலவகைப் பட்ட வீக்கம்” என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் அறிகுறிகள் தற்போது தென்படுவதாகக் கூறப்படுகிறது. நியூயார்க்கைப் போன்று ஐரோப்பிய குழந்தைகளிடமும் வீக்கம் போன்ற சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றன. இது அரிதான Kawasaki நோயாக இருக்கலாம் என்று உலகச் சுகாதார அமைப்பின் விஞ்ஞானி டாக்டர் மரியா வான் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் பிற மாகாணங்களில் இந்த நோய் பரவியிருக்கிறதா என்பது குறித்து தெளிவாக தகவல்கள் தெரியவில்லை. தற்போது நியூயார்க் கொரோனா நோயின் மையமாக மாறியிருக்கிறது. கொரோனாவினால் வயதானவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் பாதிக்கப்படுவது குறைவு என்றாலும் சில குழந்தைகளும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நியூயார்க்கில் 6 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.
நியூயார்ககில் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகளும் கொரோனா பாசிட்டிவ் கொண்டவர்கள் என்றும் நோய்த்தொற்றுக்கு எதிராக அவர்களின் உடலில் சுரக்கும் ஆன்டி பாடிகள் இப்படி வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக அறியப்பட்ட Kawasaki நோய் கண்ணில் வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மையுடையது. எனவே இந்த மர்மநோய் குறித்த முழுமையான ஆய்வுத் தேவை என்று மாநிலச் சுகாதார ஆணையத்தின் டாக்டர்ஜுக்கர் கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com