நர்ஸ்களுக்கு பாலியல் தொந்தரவு....! மாஜி மணிகண்டன் மீது குவியும் புகார்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது ஏராளமான பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வந்ததை தொடர்ந்து, இது குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கடந்த 2016 -க்கு முன்பு முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த நர்ஸ்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். இந்த விஷயம் தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
தேர்தலின் போது, ஒவ்வொரு முறையும் ராமநாதபுரத்தில், சீட் வாங்குவதற்கு கட்சிக்குள், அன்வர் ராஜாவுக்கும், மணிகண்டனும் சண்டையாகவே இருக்கும். அதிமுக-வில் இதே போராட்டம் தொடர்வதால், கட்சி சார்பாக இவர்களுக்கு சீட் தராமல், கூட்டணி கட்சியான பாஜக-நயினார் நாகேந்திரனுக்கு தொகுதியை ஒதுக்கியது.
சென்ற 2016 - ஆம் வருடம், முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் அமைச்சர் பதவியை தந்தார். ஆனால் மணிகண்டனின் அதிகார பேச்சால் பதவி பறிக்கப்பட்டு, அப்பதவி அதிமுக முனியசாமிக்கு தரப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரின் அடாவடி பேச்சு காரணமாக, ராமநாதபுரம் அதிமுகவினரில் ஒரு சிலர், அமமுக-விற்கு மாறினர்.
இதுபோல் "அதிமுக கரை போட்ட வேட்டிகளை அமமுகவினர் யாராவது கட்டினால் நடுரோட்டிலேயே உருவுங்கள், கேஸ் போட்டால் நான் பார்த்துக்கறேன்" என்று இவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது. இதேபோல் மணிகண்டன் குறித்த பிரச்சனைகள் அடுக்கிக்கொண்டே போக, சென்ற 2019-இல் உடுமலை ராதா கிருஷ்ணன் பற்றி தவறாக பேசிய போது, இவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கடந்த 4 வருட அதிமுக ஆட்சியில், தலைமை வருத்தம் அடைந்து, அமைச்சர் பதவியை பறித்தது என்றால் தான் இவருடையதுதான்.
இந்தநிலையில் தான் மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது, நடிகை சாந்தினியின் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் வெளியாகி, சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவர்கள் பணம் பறிக்கும் கும்பல் என மணிகண்டன் குற்றம் சாட்டினார். இதைத்தொடரந்து வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், சுமார் 6 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலுக்கு முன்பு, மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய போது, நர்ஸ்கள், பெண் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுபற்றி டீன்-இடம் செவிலியர்கள் புகார்கள் கொடுத்துள்ளனர். மேலும் அவனை எதிர்த்து டீன் வாசலில் போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த கேஸ்கள் தற்சமயம் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சாந்தினி பிரச்சனை:
நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் முன்னால் அமைச்சர் மணிகண்டன். கடந்த 5 ஆண்டுகளாக அவரை காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் கொள்ளவேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளனக்ளில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார்
இந்நிலையில் சாந்தினி தக்க ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மணிகண்டன் மீது அண்மையில் புகாரளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments