close
Choose your channels

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய இன்னொரு நடிகர்.. இவர் லிஸ்ட்லயே இல்லையே..!

Monday, April 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஏற்கனவே உதயநிதி, கமல்ஹாசன், விஜய் ஆகியோர் ஒரு கோடி வழங்கி உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு நடிகர் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க கட்டிட பணியை கடந்த சில வாரங்களாக மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்டிடத்தை முடிப்பதற்காக பிரபல நடிகர்களிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று அதன் பின்னர் கட்டிடத்தில் வருமானம் வந்தவுடன் அவர்களுக்கு வட்டி இல்லாமல் திருப்பி அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

அந்த வகையில் முதல் நபராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில் அதனை அடுத்து கமல்ஹாசன், விஜய் ஆகியோர் நிதி உதவி வழங்கினர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவல்படி நடிகர் நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் கடந்த 2000 முதல் 2006ஆம் ஆண்டு கால கட்டத்தில் சங்கத்தின் உப தலைவராக பொறுப்பேற்று செயல் ஆற்றியவருமான நெப்போலியன் அவர்கள் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்று நாசர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியும் ஒரு சிலர் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு பணம் கொடுக்காமல் இருக்கும் நிலையில் நடிப்பையே கைவிட்டு அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் இவர் நம்பர் லிஸ்டிலேயே இல்லையே என்று கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment