பிரசாந்த், பிரபுதேவா, மோகன்.. 'தளபதி 68' படத்தில் இணையும் இன்னொரு ஹீரோ..!

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகிய மூன்று பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது 90களில் நாயகனாக நடித்த இன்னொரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்தான் நடிகர் ஜெயராம்.

நடிகர் ஜெயராம் தமிழில் ’கோகுலம்’ ’பிரியங்கா’ ’கோலங்கள்’ ’முறைமாமன்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ’தெனாலிராமன்’ ’பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் ஏற்கனவே விஜய் நடித்த ’துப்பாக்கி’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜெயராம் தற்போது மீண்டும் அவருடன் ’தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக சினேகா, மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தில் இன்னும் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'கமல் 233' படத்தின் டைட்டில் இதுவா? கைவிடப்பட்ட டைட்டிலை வைக்க முடிவா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கமல் 233' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு கைவிடப்பட்ட படத்தின்

அண்டை மாநிலத்தில் 'லியோ' படத்திற்கு தடை.. நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் படக்குழு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன.

'லூசிபர் 2 எம்புரான்' பட இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன்

லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரமாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்'  படத்தின் இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால்

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா தமன்னாவின் படம்?

தீபாவளி தினத்தன்று கார்த்தியின் 'ஜப்பான்'  கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா 2' மற்றும் விக்ரம் பிரபு நடித்த 'ரெய்டு' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள

'லியோ' முன்பதிவு தொடங்குவது எப்போது? 'தளபதி 68' தயாரிப்பாளர் விளக்கம்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள பல முக்கிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை.