1000 கோடியுடன் இந்த 350 கோடியையும் சேர்த்துக்கோங்க: 'கே.ஜி.எப் 2' வசூல் ராக்கிங்!

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு மேலும் 350 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட பான் இந்தியா திரைப்படமாக வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 800 கோடி ரூபாய் வசூலித்தது. அதுவும் குறிப்பாக வட மாநிலங்களில் மட்டும் 350 கோடி ரூபாய் வசூல் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் ஆயிரம் கோடியை தாண்டி வசூலில் வெற்றி நடை போட்டு வரும் ’கேஜிஎப் 2 படத்தின் ஓடிடி உரிமையின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் போட்டியாக இருந்ததாகவும் கடைசியில் அமேசான் நிறுவனம் இந்த திரைப்படத்தை 350 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக ஜூன் மாதம் இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘கேஜிஎப் 2’ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் 350 கோடி வசூல் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.