மாதவன் - நயன்தாராவின் 'தி டெஸ்ட்' படத்தில் இணைந்த 'ரன்' பட நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

நடிகர் மாதவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் ‘தி டெஸ்ட்’ என்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சாக்சி ஸ்ரீ கோபாலன் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகை இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் நடிகை மீரா ஜாஸ்மின்.

ஏற்கனவே இவர் மாதவனுடன் ’ரன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி அஜித்தின் ’ஆஞ்சநேயா’ விஜய்யின் ’புதிய கீதை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட ‘தி டெஸ்ட் படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜுப்லி ஹில்ஸ் பகுதியை காலி செய்கிறாரா? நடிகை சமந்தா வாங்கிய புது வீடு குறித்த தகவல்!

நடிகர் நாகசைதன்யாவுடனான மணமுறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா முன்பு குடியிருந்த ஜுப்லி ஹில்ஸ்

சினிமாவில் ஆணாத்திக்கம் இருக்கு… 32 வருட சினிமா வாழ்க்கை குறித்து பேசிய மணிரத்னம் பட நடிகை!

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படம் மூலம் இந்தியா முழுக்கவே பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.

'என் ரோஜா நீயா'..'குஷி' படத்தின் சிங்கிள் பாடலில்  சமந்தாவின் க்யூட் ரொமான்ஸ்..!

நடிகை சமந்தா நடித்த 'குஷி' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

பிறந்தநாள் அதுவுமா? கிளாமர் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்

அஜித்தின் உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் எப்போது? சுரேஷ் சந்திரா அறிவிப்பு..!

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக உலக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பதும் அவர் பைக்கிலேயே உலகம் முழுவதும் சுற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.