'அன்னியன்' ரீமேக்கில் ஜாக்கி சான்? ஷங்கர் இல்லாமல் உருவாகிறதா?

  • IndiaGlitz, [Wednesday,November 24 2021]

கடந்த 2005ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘அன்னியன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்பதும் விக்ரம் நடித்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அன்னியன்’ படத்தின் ரீமேக் உரிமை தன்னிடம் இருப்பதாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதும் அதற்கு ஷங்கர் தரப்பில் இருந்து பதில் அறிக்கை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்கள் ‘அன்னியன்’ ரீமேக்கை இந்தியில் உருவாக்க இருப்பதாகவும் அதில் முக்கிய கேரக்டரில் ஜாக்கிசான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜாக்கி சான் மற்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த தசாவதாரம் என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஷங்கர் இல்லாமல் ‘அன்னியன்’ ரீமேக்கை ஜாக்கிசானை வைத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் உருவாக்குவாரா? அதற்கு ஷங்கர் தரப்பிலிருந்து என்ன ரியாக்ஷன் வரும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.