ஷங்கர்-ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரச்சனை: 'அந்நியன்' படத்தின் உதவி இயக்குனரின் டுவீட்!
- IndiaGlitz, [Friday,April 16 2021]
ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த பிரச்சனை நேற்று முதல் நடந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் ரீமேக்கை தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது என தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியிருக்க அதற்கு ஷங்கர் இந்த படத்தின் கதை திரைக்கதை உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை என்றும் எனவே ‘அந்நியன்’ திரைப்படத்தை ரீமேக் செய்ய தனக்கு முழு உரிமை உண்டு என்றும் பதிலளித்திருந்தார்
இந்த நிலையில் ‘அந்நியன்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும் தற்போதைய முன்னணி இயக்குநர்களில் ஒருவருமான அறிவழகன் இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
‘அந்நியன்’ படத்தின் உதவி இயக்குனர் என்ற வகையில் நான் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அறிவழகன் இயக்கிய முதல் திரைப்படமான ’ஈரம்’ திரைப்படத்தை ஷங்கர் தான் தயாரித்து இருந்தார் என்பதும் அதேபோல் அறிவழகன் இயக்கிய ’வல்லினம்’ என்ற திரைப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அறிவழகன் தவிர மேலும் சில இயக்குனர்களும் ஷங்கருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
As an AD of #Anniyan, I stand with @shankarshanmugh Sir ???? #ISupportDirectorShankar pic.twitter.com/24eoWVPIKa
— Arivazhagan (@dirarivazhagan) April 15, 2021