சன் பிக்சர்ஸ் வெளியிட்ட 'அண்ணாத்த' படத்தின் வேற லெவல் ஸ்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதும் இந்த படத்தில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இருக்கும் இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் இளமை தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், ‘தலைவர் வேற லெவல் இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர். இதனை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
#Annaatthe from the shooting spot.@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/1cb9tSCMgM
— Sun Pictures (@sunpictures) April 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com