'அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க': 'அண்ணாத்த' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,October 11 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் ’சாரக்காற்றே’ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் ’அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க’ என்ற வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.