'மாநாடு' ரிலீஸ் ஆன ஒருசில நிமிடங்களில் 'அண்ணாத்த' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சற்றுமுன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

சிம்பு ‘மாநாடு’ திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இன்று காலை 8 மணிக்கு முதல் காட்சி வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரு சில நிமிடங்களில் ‘அண்ணாத்த’திரைப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக திரையரங்குகளில் பார்க்க முடியாத ரசிகர்கள் தற்போது ஓடிடியில் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் நிபந்தனை காற்றில் பறக்கவிட்டு 20 நாட்களில் ‘அண்ணாத்த’திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.