சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்: அமெரிக்கா செல்வது எப்போது?

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இதனை அடுத்து நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் அவர் சென்னை திரும்பிய உடன் டப்பிங் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது

மேலும் ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷூம் அமெரிக்காவில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.