சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' ஃபர்ஸ்ட்லுக் எப்போது? மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை மீனா, ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றுடன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மீனாவின் இந்த பதிவை அடுத்து ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா, சூரி, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கதையை திருடிவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு!

பாலிவுட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற "மணிகர்னிகா".

'எனக்கு பயங்கர கடுப்பாயிருச்சு': இயக்குனர் பாலா குறித்து 'சேது' நாயகி பேட்டி!

கடந்த 1999ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான 'சேது' திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. நடிகர் விக்ரமுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பதும், பாலாவுக்கு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மூன்று சகோதரர்களா? அபூர்வ புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், 'அட்டக்கத்தி' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பதும் அதன் பின்னர் அவர் 'பண்ணையாரும் பத்மினியும்

காட்டுக்குள் ஸ்டைலிஷ் ரெட் குயின்… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பிரபல ஹிந்தி நடிகர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி....!

ஹிந்தி நடிகர் திலீப் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.