'என்னை கொடுமைப்படுத்துகிறார்': 73 வயது மாமனார் மீது புகார் அளித்த 'அண்ணாத்த' நடிகை!

  • IndiaGlitz, [Thursday,July 07 2022]

73 வயது மாமனார் தன்னை கொடுமைப்படுத்துவதாக 38 வயது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்த நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நட்பே துணை’ சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் மாங்காடு அனைத்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது மாமனார் மற்றும் அவரது மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா, ‘மனநலம் குன்றிய ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்து தன்னுடைய மாமனார் ஏமாற்றி விட்டார் என்றும் என் கணவர் தற்போது மனநிலை சிகிச்சையில் இருக்கிறார் என்றும் கூறினார். மேலும் தனது மாமனார் சரவணன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள் என்றும் இதற்கு முன்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளேன் என்று எனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: 'குந்தவை' த்ரிஷாவின் அட்டகாசமான போஸ்டர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன

'பொன்னியின் செல்வன்' டிரைலர் ரிலீஸ் தேதி இதுவா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

முதல்முறையாக முயற்சி செய்கிறேன்: நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ!

தனது திரையுலக வாழ்வில் முதல் முறையாக இதை முயற்சி செய்கிறேன் என நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

விஜய் தேவரகொண்டாவை பார்த்ததும் கதறியழுத பெண் டாக்டர்கள்: என்ன காரணம்?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை பார்த்ததும் இரண்டு பெண் டாக்டர்கள் கதறி அழுத சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை: நீதிமன்றம் சென்றது யார் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டில் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் சென்று உள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.