close
Choose your channels

'பார்க்கிங்', 'அன்னபூரணி' உள்பட ஓடிடியில் இந்த வார திரைப்படங்கள்..!

Thursday, December 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதும் ஓடிடியில் சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள் உள்பட மற்ற மொழி படங்களும் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் ஆனால் மழை காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் மட்டும் இந்த படத்திற்கு வசூல் குறைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படமும் கனமழை வெள்ளம் காரணமாக வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஓடிடியில் இந்த படம் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்த வாரம் வெளியாகும் இன்னொரு தமிழ் படம் ’லைசன்ஸ்’. சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வாரம் ‘கீடாகோலா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘மங்கள்வாரம்’ என்ற தெலுங்கு படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில், ‘ஸ்வாதிமுத்தின மலேஹனியே’ என்ற கன்னட படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல் ‘12த் பெயில்’ என்ற இந்தி படமும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment