கமல்ஹாசனை மெண்டல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.. அண்ணாமலையின் சர்ச்சை கருத்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கமல்ஹாசனை மெண்டல் மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது என்பதும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்த போது ’மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டால் இந்தியாவின் தலைநகர் நாக்பூருக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார். நாக்பூரில் தான் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் இருப்பதால் அவர் இவ்வாறு மறைமுகமாக கூறியிருந்ததாக தெரிகிறது.
இது குறித்து செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கருத்து கேட்டபோது ’கமல்ஹாசனுக்கு மூளை சரியாக வேலை செய்கிறதா? என்று பரிசோதிக்க வேண்டும் என்றும் அவரை மெண்டல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு ஊருக்கு மாற்ற முடியும்? இந்தியாவின் இன்னொரு தலைநகராக சென்னை உள்பட சில நகரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் கூட நானும் அதை ஆதரித்திருப்பேன், ஆனால் டெல்லிக்கு பதிலாக நாக்பூருக்கு மாற்ற வேண்டும் என்று கூறிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதிக்க வைக்க வேண்டும் என்று கூறினார்.
உண்மையில் அவர் நன்றாகத் தான் இருக்கிறாரா? வலது, இடது மூளை சரியாக செயல்படுகிறதா? சுய நினைவோடு இருக்கிறரா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் கமல்ஹாசனை பெருமைக்குரிய ஒரு கலைஞனாக அனைவரும் மரியாதை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் அவர் பிக் பாஸ் மற்றும் அரசியல் மூலம் தனது பெருமைகளை இழந்து வருவதாக ஒரு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த சர்ச்சைக்குரிய விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout