சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட்-ரைட் வாங்கிய பாட்டி.. மீனா முகத்தில் சந்தோஷம்..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த சில எபிசோடுகளாக மீனாவை விஜயா வாட்டி எடுத்து வருகிறார் என்பதும் மீனாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் திடீரென அண்ணாமலை அம்மா என்ட்ரி ஆகிறார். வீட்டிற்குள் நுழையும் முன்பே அவர் விஜயாவை லெஃப்ட் ரைட் வாங்குகிறார். என் பிள்ளை அண்ணாமலையை நீ சரியாக பார்த்துக் கொள்வதில்லை, உன்னால்தான் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, நீ மட்டும் நன்றாக இருக்கிறாய், என் பிள்ளையை ஏன் இப்படி விட்டுவிட்டாய்’ என்று சரமாரியாக திட்டுகிறார்.

இதை கேட்டு விஜய் அதிர்ச்சி அடைகிறார், நான் ஒன்றும் செய்யவில்லை, அவர் நன்றாகத்தான் இருக்கிறார் என்று விஜயா சொல்லியும் பாட்டி தொடர்ச்சியாக திட்டுவது மட்டுமின்றி கேலியும் கிண்டலும் செய்கிறார். இதை பார்த்த மீனா உள்ளுக்குள் சிரிக்கும் காட்சி இன்றைய எபிசோடில் உள்ளது,

மேலும் விஜயாவை மட்டும் இன்றி மனோஜ், முத்து, ரவி ஆகிய மூவரையும் அவர் திட்டுகிறார். குறிப்பாக மிகுந்த பாசம் வைத்திருக்கும் முத்துவை அவர் கன்னத்தில் பளாரென அடிக்கிறார். நீ கூட என்னிடம் அண்ணாமலைக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லவில்லையே என்று கோபித்துக் கொள்கிறார். அதோடு, ‘மீனா மட்டும் தான் இந்த வீட்டில் பொறுப்பாக இருக்கிறார், அவளுக்கு இருக்கும் பொறுப்பு யாருக்கும் இல்லை என்று சொன்னவுடன் விஜயாவும் முத்துவும் மீனாவை முறைக்கின்றனர்.

இந்த நிலையில் மூன்று மருமகள்களையும் சரிசமமாக நடத்தாமல் மீனாவை மட்டும் கொடுமை செய்து வரும் விஜயாவுக்கு சிம்ம சொப்பனமாக பாட்டி எண்ட்ரி ஆகி உள்ளதால் இந்த சீரியல் இன்னும் சில நாட்களுக்கு கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? அவரே அளித்த விளக்கம்..!

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

இவன்கூட குடித்தனம் பண்றதுக்கு தனியா இருந்திடலாம்.. தினேஷை வச்சு செஞ்ச பெண் போட்டியாளர்..!

இவன் கூடத்தான் பண்றதுக்கு தனியா இருந்திடலாம்,  திரும்பி வந்துடாதம்மா தாயே என தினேஷ் குறித்து ரக்ஷிதாவுக்கு அறிவுரை கூறும் வகையில் பெண் போட்டியாளர் ஒருவர் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜயகாந்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது! தீவுத்திடலில் அஞ்சலி செய்த ரஜினிகாந்த் பேட்டி..!

கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியலுக்கு வரப்போவதாக சொன்னீர்களே.. எப்போது வருவீர்கள்? அஜித்துக்கு கேள்வி எழுப்பிய இயக்குனர்..!

நீங்கள் அரசியலுக்கு வருவதாக  பிரபல நடிகர் ஒருவரிடம் சொன்னீர்களே? ஏன் வரவில்லை ? எப்போது வருவீர்கள்? என்று பிரபல இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்  

கமல், ரஜினி, அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் த்ரிஷா?

 ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய் என 4 முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.