ரவி வீட்டுக்கு வர சம்மதிக்கும் அண்ணாமலை.. ஆனால் ஒரு நிபந்தனை: 'சிறகடிக்க ஆசை'யில் திருப்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரவி-ஸ்ருதி திருமணம் காரணமாக மீனா மேல் கோபமாக இருந்த முத்து, தற்போது தான் மீனா மீதான கோபத்தை மறந்து அவருடன் அன்புடன் இருக்கிறார். மேலும் அவருடைய காரும் கிடைத்து விட்டதை அடுத்து தற்போது மீனா - முத்து வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ரவி மற்றும் ஸ்ருதியை வீட்டுக்கு அழைத்து வர விஜயா முயற்சி செய்யும் நிலையில் முத்து மற்றும் அண்ணாமலை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரவி, ஸ்ருதியை முத்து, மீனா சந்திக்கும் நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த நிலையில் ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைத்து வர விஜயா, அண்ணாமலை இடம் கூறும் போது மீனாவும் அதற்கு ஆதரவு தருகிறார். ரவியை மன்னித்து நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுடைய கௌரவம் தான் அதிகரிக்கும் என்று மீனா கூறுகிறார். ஆனால் ரவியை வீட்டுக்கு வரவழைக்கும் பேச்சுக்கு இடமில்லை என்று அண்ணாமலை கறாராக கூறிய நிலையில் விஜயா திடீரென உண்ணாவிரதம் இருக்கிறார்.
இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ரவியை வீட்டுக்கு வரவழைக்க சம்மதிக்கும் அண்ணாமலை ஒரு ஒரு நிபந்தனையை விரிக்கிறார். எந்த காரணத்திற்காக ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்க விஜயா முயற்சிக்கிறாரோ அதை தவிடு போட்டு ஆக்கும் வகையில் அண்ணாமலையின் நிபந்தனை இருப்பதால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
இந்த நிலையில் முத்து இருக்கும் வீட்டிற்கு வர மாட்டேன் என்று ஸ்ருதி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ரவி, ஸ்ருதி வீட்டுக்கு வருவார்களா? அதன் பிறகு பிரச்சனைகள் ஏற்படுமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.
இந்த நிலையில் மனோஜ் வேலையில்லாமல் பார்க்கில் சுற்றிக் கொண்டிருப்பதை தற்செயலாக ரோகிணி பார்த்து விட அதை மனோஜ் சமாளிக்கும் காட்சிகளும் இன்றைய எபிசோடில் உள்ளது. மொத்தத்தில் இனிவரும் எபிசோடுகள் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments