'பீஸ்ட்' படத்தில் இந்தி மொழி வசனம்: அண்ணாமலை, ஜெயகுமார் கருத்து!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற விஜய் பேசும் ஹிந்தி மொழி குறித்த வசனம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வசனம் குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ‘பீஸ்ட் படத்தில் விஜய் பேசிய வசனத்தை நானே பல இடங்களில் பேசி உள்ளேன் என்றும் விஜய் பேசிய வசனத்தில் எனக்கு உடன்பாடுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் கருத்து முரண்பாடு ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஹிந்தி மொழி வசனம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது, ‘விஜய் கூறியது போல் தமிழகத்தில் இந்தி மொழிக்கு இடமில்லை என்றும் தேவைப்பட்டால் வடமாநிலத்தவர்கள் தமிழைப் படித்துக் கொள்ளட்டும் என்றும் எங்களை பொருத்தவரை தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
 

More News

'பீஸ்ட்' விமர்சனம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று காலை வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில்

அமைச்சரானவுடன் நடிகை ரோஜாவின் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் நடிகை ரோஜா பதவியேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா

பிரியாவிடை பெறுகிறேன்: படப்பிடிப்பு முடிந்ததை நெகிழ்ச்சியுடன் அறிவித்த சூரி!

நடிகர் சூரி தனது சமூக வலைத்தளத்தில் தான் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் உடன் லைலா: வைரல் வீடியோ

22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரசாந்த் உடன் நடித்த வீடியோவை நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

அமித்ஷாவின் 'இந்தி' பேச்சுக்கு 'பீஸ்ட்' பட வசனம் மூலம் பதிலடி தந்தாரா விஜய்?

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமென சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.