விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள 'அண்ணாதுரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் சென்சார் அதிகாரிகள் கட் செய்யாமல் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார் சான்றிதழ் இந்த படத்திற்கு கிடைத்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது..

விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்தது மட்டுமின்றி இசை மற்றும் எடிட்டிங் பணியையும் இந்த படத்திற்காக அவர் செய்துள்ளார். ராதிகா மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி, டயானா, மஹிமா, காளி வெங்கட், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் 'பிச்சைக்காரன்' படம் போலவே இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

அரசியல் அறிவிப்புக்கு பதிலாக அதிரடி அறிவிப்பு: கமலின் விஸ்வரூபம்?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 7ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்,. இந்த நாளில் அரசியல் குறித்த அதிரடி அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருவதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்து தீவிரவாதம் குறித்த சர்ச்சை: கமல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு?

உலகநாயகன் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார் என்பது தெரிந்ததே.

மழை வெள்ளம் மீட்புப்பணி: களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி, நாசர் குழு

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடு போல் காட்சி அளிக்கின்றது.

உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப்? தீவிரவாதிகளின் கைவரிசையா?

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது ஃபேஸ்புக் உரிமையாளரின் கையில் உள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென உலகின் பல நாடுகளில் வாட்ஸ்