அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பது தெரிந்ததே. இவருடைய ஆலோசனையின்பேரில் தான் தக்சா குழு ஆளில்லா விமானங்களை வடிவமைத்து உலக அளவில் புகழ் பெற்றது.
இந்த நிலையில் தக்சா குழுவுக்கு சிறப்பாக ஆலோசனை வழங்கி அந்த குழு சாதனை செய்ய உதவிய அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் தங்களுடைய ஒத்துழைப்பினால் சிறப்பான முறையில் புராஜக்ட் முடிவு பெற்றதாகவும் எதிர்காலத்தில் உங்களின் சேவையை உங்களுக்கு தகுந்த நேரத்தில் பெற விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜித் ஆலோசனையின் கீழ் தக்ஷா குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடம்பிடித்தது என்பதும், சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தக்சா குழுவினர்கள் தயாரித்த ஆளில்லா ஏர் டாக்ஸி அனைவரின் கவனத்தையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com