அஜித்துக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆளில்லா விமான போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது அனைவரும் அறிந்ததே. பரிசுடன் திரும்பி வந்த தக்சா குழுவினர்கள் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் அஜித்தின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட விமானத்திற்கு பரிசு கிடைத்துள்ளதால் அஜித்துக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் தக்சா குழுவில் உள்ளவர்கள் அஜித் குறித்து கூறியபோது, 'அஜித் எங்களுடன் மற்ற விஷயங்கள் குறித்து பேசினாலும் தன்னுடைய படம் குறித்தும் தன்னை பற்றியும் பேச மாட்டார். மேலும் இது உங்கள் கண்டுபிடிப்பு. உங்களை முதன்மைப்படுத்துங்கள், என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம்' என்று கூறுவார். ஆளில்லா விமான தயாரிப்பில் அவருக்கு இருக்கும் அறிவு, சர்வதேச பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு இணையானது' என்றும் தக்சா குழுவினர் கூறியுள்ளனர்.